Category: வத்திக்கான்

இளைஞர்களில் முதலீடு செய்ய கர்தினால் பரோலின் அழைப்பு!

அமைதியின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இளைஞர்களில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கல்வி, வேலைகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் அவர்கள் தீவிரவாதம், போர் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தலுக்கு ’இரையாக’ மாறும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.…

உலகளாவிய அமைதிக்கான அறிவியலாளர்கள் வேண்டுகோள்!

உலகெங்கிலும் உள்ள அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரும் இடம்பெற்று வரும் உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் அமைதியை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி, அனைத்துலக வேண்டுகோள் ஒன்றை திருப்பீட வாழ்வுக் கழகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 11, புதன்கிழமையன்று, வெளியிட்ட…

திருஅவையின் வாழ்விலும் தலைமையிலும் பெண்களின் பங்களிப்பு

“திருஅவையின் வாழ்விலும் தலைமையிலும் பெண்களின் பங்களிப்பு” என்பதன் மீது கவனம் செலுத்தி, ஆயர் பேரவையின் பொதுச் செயலகம் தனது ஆய்வுக் குழுக்கள் தயாரித்துள்ள மூன்றாவது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ்…

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

மார்ச் 11, புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு ’மக்களினங்களின் ஒளி’ என்ற திருஅவைப் பற்றி இரண்டாம்…

திருக்குடும்பத்தால் ஈர்க்கப்பட்ட விருந்தோம்பலைப் பேணுங்கள்!

மற்றவர்களை வரவேற்பதன் முக்கியத்துவத்தையும், கவனத்துடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, நாசரேத்தின் திருக்குடும்பத்திடமிருந்து விருந்தோம்பல் கலையைக் கற்றுக்கொள்ளுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அழைப்பு விடுத்தார். மார்ச் 12, வியாழக்கிழமையன்று, திருப்பீடத்தில் இத்தாலியின் சாக்ரோஃபானோவில் நிகழ்ந்த “விருந்தோம்பல் பேராலயம்” நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றியபோது இவ்வாறு…

பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத் துறைக்கு புதியத் தலைவர் நியமனம்.

மார்ச் 12, வியாழக்கிழமையன்று, புனித அகுஸ்தினார் சபையைச் சார்ந்த பேராயர் லூயிஸ் மரின் தெ சான் மார்ட்டின் அவர்களை, பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவராக, திருத்தந்தை பதினான்காம் லியோ நியமித்தார். 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி இத்தாலியிலுள்ள சூலியானாவின்…

போர்களில் ஈடுபடும் கிறிஸ்தவர்கள் தங்கள் செயல்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்! திருத்தந்தை லியோ

திருஅவை எல்லையற்ற இரக்கத்தை வழங்கினாலும், பல கிறிஸ்தவர்கள் பாவமன்னிப்பைப் புறக்கணிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு, ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துமாறு அருள்பணியாளர்கள் மற்றும் அருள்பணித்துவ பயிற்சி மாணவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ ஊக்குவித்தார். மார்ச் 13, வெள்ளிக்கிழமையன்று, திருத்தூதுசார் பாவமன்னிப்பு அவையால் ஆண்டுதோறும்…

நற்செய்தி விழுமியங்களையும் ஒருமைப்பாட்டையும் கடைபிடியுங்கள்! திருத்தந்தை லியோ

எளிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு உதவுவதற்கும், இத்தாலிய சமூகத்தில் கத்தோலிக்கர்களின் தீவிர ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளித்ததற்காக, கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனம் மற்றும் கத்தோலிக்கக் காப்பீட்டுச் சங்கம் ஆகியவற்றை திருத்தந்தை பதினான்காம் லியோ பாராட்டி மகிழ்ந்தார். மார்ச் 13, வெள்ளியன்று…

நல்ல சமாரியரைப் போன்று தேவையில் இருப்போருக்கு உதவுங்கள்!- திருத்தந்தை

அமெரிக்காவையும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கத் தொண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் கத்தோலிக்க நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் (குஹனுஐஊஹ) என்ற அமைப்பின் 50 ஆண்டுகால தன்னலமற்ற சேவையைப் பாராட்டி திருத்தந்தை பதினான்காம் லியோ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இவ்வமைப்பின் 50-ஆம் ஆண்டு…

கிறிஸ்துவைச் சந்திப்பது உலகை புரிந்துக்கொள்ள உதவுகிறது! – திருத்தந்தை லியோ

“இன்றைய உலகம் அநீதி, வன்முறை மற்றும் துன்பத்தால் நிறைந்துள்ளதால், நமது இறைநம்பிக்கை விழிப்புணர்வும் கவனமும் கொண்டதாகவும், சரியானதைப் பற்றிப் பேசக்கூடியதாவும் இருப்பது முக்கியம்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். மார்ச் 15, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்…