“திருஅவையின் வாழ்விலும் தலைமையிலும் பெண்களின் பங்களிப்பு” என்பதன் மீது கவனம் செலுத்தி, ஆயர் பேரவையின் பொதுச் செயலகம் தனது ஆய்வுக் குழுக்கள் தயாரித்துள்ள மூன்றாவது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கிய ஒரு பரந்த திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த அறிக்கை அமைந்துள்ளது. இத்தாலிய மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கக்கூடிய இந்த அறிக்கையுடன், ஐந்து மொழிகளில் அதன் சுருக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

திருஅவையின் பெண் ஆலோசனையாளர்கள் மற்றும் பெண் தலைவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், திருஅவைக்குள் பெண்களின் பங்களிப்பு குறித்த ஓர் ஆழமான சிந்தனையை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

பெண்களின் நிலை குறித்து எழுப்பப்படும் கேள்விகள் இன்றைய காலத்தின் தேவை என்பதையும், இதில் கடவுளின் தூய ஆவியார் செயல்படுவதையும் இந்த ஆய்வு எடுத்துரைத்துள்ளது. அத்துடன் அந்தந்தப் பகுதி மக்களின் கலாச்சாரப் பின்னணிக்கு ஏற்ப இந்த விடயத்தை அணுக வேண்டியதன் அவசியத்தையும் இது வலியுறுத்தியுள்ளது.

பெண்களின் இருப்பின் அருங்கொடைசார் பரிமாணம் (ஊhயசளைஅயவiஉ னiஅநளேiடிn), திருஅவைப் பண்புடைய நிர்வாகம் (நுஉஉடநளயைட படிஎநசயேnஉந), மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ ஆகியோரின் முக்கிய பங்களிப்புகள் ஆகியவை இதில் உள்ள முக்கிய கருப்பொருள்களாகும். குறிப்பாக உரோமைத் தலைமைச் செயலகத்தின் அதிகாரமிக்க பதவிகளைப் பெண்களுக்கு வழங்குவதில் அவர்கள் எடுத்த முடிவுகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

திருஅவையில் பெண்களின் பங்களிப்பு குறித்து வரலாற்று ரீதியாகவும் இன்றைய காலக்கட்டத்தில் நிலவும் கருத்துக்களைத் தொகுத்து, ஒரு விரிவான இணைப்புப் பகுதியையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்காக, இந்த அறிக்கைகளை படிப்படியாக வெளியிட ஆயர் மாமன்ற பொதுச்செயலகம் உறுதியளித்துள்ளது. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் எதிர்காலச் செயல்பாட்டு முன்மொழிவுகள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மதிப்பாய்விற்காகச் சமர்ப்பிக்கப்படும்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.