Category: திருத்தந்தை

பிறரன்புப் பணிகள் வழியாக நற்செய்தியை வாழ்ந்து காட்டுங்கள்! திருத்தந்தை லியோ

“சில வேளைகளில், மற்றவர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் கவனிக்கத் தவறும் போது நாமும் பார்வையற்றவர்களாக மாறுகிறோம்” என்றும் “தொடக்க கால கிறிஸ்தவர்கள் ஒன்றாக இறைவேண்டல் செய்து, எல்லாவற்றையும் மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் பகிர்ந்து கொண்டது போல, இயேசு நம்மை வித்தியாசமாக வாழ அழைப்பு விடுக்கிறார்”…

மத்திய கிழக்கில் போரால் பாதிப்படைந்தவர்களுக்கு திருத்தந்தை ஆறுதல்!

மேற்கு ஆசியாவில் இடம்பெற்று வரும் வன்முறை, குறிப்பாக குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் உட்பட அப்பாவி உயிர்கள் மீதான பேரழிவு தாக்கம் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மார்ச் 10, செவ்வாய்க்கிழமையன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம்…

மார்ச் மாத இறுதியில் மொனாக்கோவிற்கு திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்

மார்ச் மாதம் 28 ஆம் தேதி திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மொனாக்கோ நாட்டிற்கு அமைதிக்கான ஒரு நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார். இது அவரது முதல் ஐரோப்பிய பயணமாகவும் 2026-ஆம் ஆண்டின் முதல் அனைத்துலகத் திருத்தூதுப் பயணத்தைக் குறிக்கும் விதமாக…

இயேசுவே நமது தாகத்திற்கான பதிலாக இருக்கிறார்! -திருத்தந்தை லியோ

“உங்கள் கண்களைத் திறந்து, கடவுளிடமிருந்து வரும் எதிர்பாராத வியப்புக்குரிய செயல்களை அடையாளம் காணுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது திருஅவையிடம் கூறுகின்றார்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ மொழிந்தார். மார்ச் 08, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்…

இராணுவச் சேவை என்பது இறை அருளில் ஊன்றிய ஓர் அழைப்பு!

“சமூகம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தாலும், அவற்றை உள்வாங்கிக் கொள்ளத் தவறிவிடுகிறது” என்றும், “குறிப்பாக வரலாற்றில் கடவுளின் இருப்பை உணர மறந்துவிடுகிறது” என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. மார்ச் 07, சனிக்கிழமையன்று, இத்தாலிய இராணுவப் பேராயரகத்தின் (Military Ordinariate of Italy)…

நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள்!

“அமைதி என்பது வெறுமனே மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, அது இறைவனிடமிருந்து வரும் ஒரு கொடை” என்றும், “நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்” என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். சிகாகோவிலுள்ள இலயோலா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும்…

ஆண்டவர் இயேசு ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்முடன் பயணிக்கிறார்! -திருத்தந்தை

மார்ச் 08 ஆம் தேதி ஞாயிறன்று, உரோமையின் பழைய கோபுர சாலையிலுள்ள புனித காணிக்கை அன்னை பங்குத்தளக் கோவிலில் தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, “இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பில் பங்குபெறப்போகும் முக்கிமான தருணத்தில் நாம்…

மத்திய கிழக்கில் அமைதி மற்றும் உரையாடல் நிகழட்டும்!

.மார்ச் 03 ஆம் தேதி செவ்வாயன்று, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, “உலகளவில் வெறுப்பு அதிகரித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வழி காண வேண்டும்” என்று வலியுறுத்தினார். “அமைதிக்காக…

உலகளாவிய ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதிக்கு திருத்தந்தை அழைப்பு!

தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நாளில் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று உலகத்துடன் முதன்முதலில் பகிர்ந்து கொண்ட தனது வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, வன்முறையை விட தூதரக உறவுகளையும், இராணுவமயமாக்கலை விட ஆயுதக் களைப்பையும் முன்னுரிமைப்படுத்துமாறு நாடுகளை வலியுறுத்தியுள்ளார். திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல்…

வெள்ளியன்று உலக அமைதிக்காக செபிக்கவும் உபவாசம் இருக்கவும் சிவகங்கை ஆயர் அழைப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர்கள் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கவலை தெரிவித்து அருள்பணியாளர்களும் இறைமக்களும் இணைந்து கத்தோலிக்க ஆலயங்களைத் திறந்து திருச்செபமாலை செபிக்கவும் நற்கருணை ஆண்டவருக்கு முன்பு முழந்தாள்படியிட்டு செபிக்கவும் அழைப்புவிடுத்துள்ளார். தமிழக ஆயர் பேரவையும்…