லெபானான். இது கடவுளின் தோட்டம். திருவிவலியத்தில் இறைவனின் மாட்சிமிகுந்த இடங்களில் ஒன்றாக திகழ்ந்த இப்பகுதி இன்றளவும் கடவுளின் தோட்டமாக அறியப்படுகிறது. லெபானின் வானுயர்ந்த மலைகளில் கல்லால் கட்டப்பட்ட பேராலயங்கள், அதன் மலைச் சரிவுகளின் ஒட்டிக்கொண்டிருக்கும் பழமையான ஜெபக்கூடங்கள், பழமையான கிறிஸ்தவத்தின் வேர்களும் வேரடி மண்ணும் ஒட்டியிருக்கும் மரோனியக் கிறிஸ்தவம், கத்தோலிக்கத்தின் ஆதி எச்சங்கள் நிறைந்த நாடுதான் இந்த லெபானான் நாடு. கீழைத் திருச்சபையையும் மேலை (ரோமானியத்) திருச்சபையையும் இணைக்கும் பாலம்தான் லெபனான் மரோனிய திரு அவை. மரபும் ஆழமான விசுவாசமும் மாறாத பாரம்பரியமும் கொண்ட ஆன்மீகம்தான் லெபானின் அடித்தளம். மரோனிய திருஅவை புனிதர்கள் ஏராளம். இவர்களில் புனித திருப்பலிமீது தீராப் பற்றுக் கொண்ட புனித சார்பெல் மாக்லோஃப், துறவியான புனித நிமுத்துல்லா, லெபானின் மலர் என்றழைக்கப்படும் புனித ராப்க்ஹா, முதலாம் உலகப்போரில் தேவையிலிருப்போருக்கு உதவி அருளாளர் எஸ்டீபான் நேமே ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


இப்படிப்பட்ட ஆன்மீகப் பாரம்பரியமும் பற்றும் கொண்டு மரோனியத் திருஅவையின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் பெண்துறவிதான் அருட்சகோதரி லியா லாஹூட்.
இவருக்கு இந்தத் துறவுவாழ்க்கை என்பது ஒருபோதும் வேடம்பூண்ட வாழ்வாகவும் திருப்பங்கள் நிறைந்ததாகவும் இல்லாமல், ஏற்கனவே நன்கு திட்டமிட்டதாகவும் தெளிந்த நிரோடையைப் போலவும் அமைந்திருக்கிறது என்பதே உண்மை. சிறுமியாக இருந்தபோது தான் ஒரு துறவியாக வேண்டும் என்ற தீராத்தாகமும் வேட்கையும் கொண்டவராக அன்புத்தீயிலும் ஆன்மீக அனலிலும் இவர் பற்றி எரிந்தார். செபத்தில் வேரூன்றி, தினந்தோறும் திருப்பலியில் ஊட்டம்பெற்ற குடும்பத்தில் வளர்ந்ததால் இவருக்கும் துறவறம் – ஆன்மீகம் என்பது ஒருபோதும் அந்நியமாக தோன்றவில்லை. ஓர் உள்ளார்ந்த அமைதியைத் தேடி அவர் ஆவலோடு காத்திருந்தார். இறைவனிடமிருந்து உரிய அடையாளமும் அழைப்பும் தனக்கு வரும், தன் தோளைத் தொட்டு அவர் அழைப்பார் என்று எதிர்நோக்கோடு காத்திருந்தார். ஆனால்.. எஞ்சியது துன்பமும், குழப்பமும், தவறான புரிதலும்தான். துன்பமும் துயரமும் குழப்பமும் இவரைத் துவண்டுப்போகச் செய்யவில்லை. ஒருநாள் ஏதோ ஓர் ஆழ்ந்து அமைதியை தன்னுள் உணர்ந்தார். அது இடி முழக்கத்தைவிட மிகுந்த பேரொலி மிகுந்ததாக இருந்தது. இறையழைத்தலைத் தன்னுள் உணர்ந்தார். தன்னைத் தந்தார்.


இவரது மகிழ்ச்சி நிறைந்த ஆசிரமத் துறவற வாழ்வில் ‘வழக்கமானது‘ என்று இயல்பாக சொல்லமுடியாது. ஒவ்வொரு நாளும் ஆன்மீக வாழ்வு என்பது சவால் நிறைந்த ஒன்று. இவர் பொருளாளராக உள்ள புனித யோசேப்பு துறவு ஆசிரமத்தில், எந்த இரண்டு நாளும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இங்குதான் மரானிய திருஅவையின் லொபனின் மலர் என்னும் புனிதை ராப்க்ஹாவின் கல்லறை உள்ளது.


இன்று, சகோதரி லியாவின் வாழ்க்கை மடக்குமுகம் வாழ்க்கையின் சாதாரண குறிச் சுழற்சியில் விரிகிறது, ஆனால் “சாதாரணம்” என்பது சரியான சொல் அல்ல. ஸ்டா. ரஃப்கா மடாலயத்தில் பொறுப்பாளர் எனவே, இரண்டு நாள்களும் ஒரே மாதிரியாக இல்லை. தினமும் அதிகாலை 5மணிக்கு ஆழ்நிலை தியானத்தில் தொடங்கி, காலை 6.30 மணிக்கு திருப்பலியில் பங்கேற்பார். காலை உணவு உண்பதற்குள் அவரது கைப்பேசி ஒலிக்கவில்லையென்றால்தான் ஆச்சரியம். அவரது அன்றாடப் பணித் தொடங்கும். வரவுசெலவு கணக்கைப் பராமரிப்பது. ஆசிரமத்திற்குச் சொந்தமான நில புலங்களைப் பார்வையிடுவது, பட்டியில் உள்ள வளர்ப்புப் பிராணிகளுக்கு உணவளிப்பது, தேவையானப் பொருட்களைகொடுப்பது, எழும் பிரச்சனைகளை அவ்வப்போது தீர்ப்பது என்று..சூறாவளிப் பயணம் தொடரும். இதற்கிடையே நண்பகல் கட்டளைச் செபத்தைச் செபித்துவிட்டு, மதிய உணவிற்குச் செல்வார். ஆன்மீகப் பணியும் அன்றாடப் பணியும் இரு கண்கள். இடைவிடாமல் உழைப்பதற்கு அடித்தளமும் நங்கூரமும் செபம்தான். மாலைச் செபமும் அதனைத் தொடர்ந்து இரவு உணவும் அன்றைய தோழமைநிறைந்த குழும உணர்வுமிக்க துறவு தினத்தை முடிவுக்கு கொணர்ந்து, தனிமை நிறைந்த ஆழ்ந்த அமைதி உறைந்த தனிச்செபத்தில் அமிழ்த்தும். உழைப்பின் மிகுதியால் களைப்பு ஏற்பட்டு ‘அப்பாடா‘ என்று ஆற்றலில் சுழியம் வெறுமை ஏற்படும். ஆண்டவரே எனக்கு ஓய்வளித்தீடுவீர் என்று இறைஞ்சிவிட்டு ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட பாறையைப் போல அயர்ந்து தூங்குவார்.


இவரது ஆசிரமத் துறவற வாழ்வில் தேனி பராமரிப்பு என்பது தனித்துவம் நிறைந்த ஒரு கடமை. அருட்சகோதரி லியாவிற்கு தேனிக்கள் தோட்டம் என்பது இறைவனுடன் ஆழமானச் சந்திப்பு நிகழும் இடம்.

பல கடமைகளில், ஒன்று தனிப்பட்ட சிந்தனையாக வெளிப்படுகிறது: தேனீகேள்வி. சகோதரி லியாவிற்கு, தேனீகள் கடவுளுடன் ஆழமான சந்திப்பின் இடமாக மாறியுள்ளது.
இந்தத் தேனித் தோட்டம்தான் எனது வெளியுலக செபக் கூடம். ஒவ்வொரு தேன்கூடும் இறையருள் எதிரொலிக்கும் சிறிய சரணாலயம்.
ஒவ்வொரு தேன் கூட்டையும் அவர் செபத்தில் நினைவுகூரும் நபரின் பெயரால் அழைப்பார். அவர்களில் சிலர் விண்ணுலகில் உள்ளனர்,பலர் அவர்தம் தோழர்கள், மருத்துவர்கள், அவரது பயணத்தைச் செதுக்கியவர்கள். இப்படி அவர் தேனிக்களை அவர்கள் தம்தேன்கூடில் பராமரிக்கும்போது அவர்களை செபத்தில் நினைவுகூர்ந்து செபிக்கிறார்.
தேனிக்கள் தான் ஆசிரியர்கள். தேனிக்களின் அமைதி நிறைந்த வாழ்வும் நோக்கம் நிறைந்த பயணமும் ஒரு புனித மறைபொருள். ஒழுக்கமும் ஒழுங்கும் ஒத்துழைப்பும் அழகும் இந்தச் சிறிய உயிரினங்களிடம் இருக்கிறது. இது இத்துறவியின் ஆன்மிக ஆசிரமத் துறவு வாழ்வை நினைவுப்படுத்துகிறது. இத்துறவு மடம் ஒரு தேன்கூடு. துறவுமடத்தின் தலைமைச் சகோதரி தேனிக்களின் இராணி. உடன் உழைப்பாளர்கள்தான் அருட்சகோதரிகள், எப்போதும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் தொண்டாற்றுபவர்கள்.


செபமும் உழைப்பும்தான் மரோனிய ஆன்மீகத்தின் அடிப்படை. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த புனித மரோனின் பாரம்பரியத்தில் வளர்ந்த மரோனியத் திருஅவை தனிமையிலும் தியாகத்திலும் வாழ்ந்து இறைவனோடு ஒன்றித்து இந்த ஆசிரமத் துறவிகளிலிருந்து வளர்ந்தது என்பது வரலாறு. வரலாற்றில் மதரீதியாக தொடர் துன்புறுத்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் இருந்தபோதிலும் மரோனியத் திருஅவை, தங்களுடைய சிரிய திருவழிபாட்டு பாரம்பரியத்தைக் கடைபிடித்து, உரோமையில் உள்ள திருத்தந்தையுடன் முழுமையான நல்லுறவில் திளைத்திருக்கிறது.
மரோனியத் திருஅவையின் திருவழிபாட்டு முறை பாரம்பரிய ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது. பேசுவதற்குப் பதிலாகப் பாடுவதும் திருவிவிலியத்திலும் இலக்கிய கற்பனையிலும் வேருன்றுவதும் விண்ணுலக மறைபொருளை மண்ணுலகில் கீர்த்தனைகள், அமைதி, மற்றும் அடையாளங்கள் வழியாக வழிபடுவர்களை அனுபவிக்கத் தூண்டுவதும் மரோனியத் திருஅவையில் உண்டு. இசை என்பது ஓர் அலங்காரப் பொருள் அல்ல, மாறாக, ஆன்மாவைச் செப்பனிடும் ஆசிரியம். பக்தி கீர்த்தனைகளைத் திரும்பத்திரும்ப பாடுவதால் இதயம் செழுமையடைகிறது. தன் புதுமைகளால் உலகம் முழுவதும் போற்றப்படும் புனித சார்பெல், தனது துன்பத்திலும் துயரத்திலும் ஆன்மாக்களை மீட்பதற்காக கிறிஸ்துவில் ஒன்றித்த புனித ராப்க்ஹா மரோனியத் திருஅவையின் முத்துக்கள்.
ஆனால் அண்மைக்காலமாக லெபானானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, அரசியல் குழப்பங்கள், போரின் தாக்கங்கள் ஆகியவற்றால் அதன் சமூக வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவச் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனைகளைக் கடந்து வந்த அருட்சகோதரி லியோ, திருஅவை வாழ்வு நிறைந்ததாக இருப்பதற்கு முனைகிறார். விசுவாசம் என்பது மறையவில்லை, மாறாக அது புடமிடப்படுகிறது.


மேற்கத்தியத் திருஅவைக்கு இந்த லெபலானின் மரோனியத் திருஅவை, அமைதி, உண்ணாநோன்பு, இயற்கை நிறை அழகியல் வாழ்வு, செபவாழ்வு, கடின உழைப்பு நிறைந்த துறவற வாழ்வு என்று அனைத்தையும் கொடுக்க விழைகிறது. கீழைத் திருஅவையையும் மேலைத் திருஅவையையும் இணைக்கும் பாலமாக மரோனியத் திருஅவை விளங்குகிறது. உலகம் ஒன்றிணைவதற்கு ஒரேமாதிரி இருப்பது அவசியமில்லை, மாறாக, விசுவாசமாக இருப்பதுதான் அவசியம் என்று கற்பிக்கிறது.
பொருளாதார வீழ்ச்சி, அரசியல் нестабильность மற்றும் போரின் நீடிக்கும் காயங்கள் கிறிஸ்தவ சமுதாயங்களை ஆழமாக சோதனை செய்துள்ளன. சகோதரி லியா இந்த சோதனைகளை நேரடியாக அனுபவித்துள்ளார். இருப்பினும், திருச்சபை உயிருடன் உள்ளது என்று அவர் வலியுறுத்துகிறார். விசுவாசம் மாயமானது இல்லை; அது தூய்மையடைந்துள்ளது.
மரோனிய திருஅவையின் துறவி அருட்சகோதரி லியோவின் உள்ளத்தில் பற்றியெரியும் ஆன்மிக நெருப்பு தமிழகத் திருஅவையிலும் எழுச்சிமிகுந்த துறவிகளை உருவாக்கட்டும்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.