Priestly Formation

குருமாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கடவுளுடன் வாழும் உறவு  இல்லையென்றால் அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி அர்த்தம் இழந்துவிடும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.

பிப்ரவரி 28, சனிக்கிழமையன்று, நான்கு ஸ்பானிய அருள்பணியாளர் உருவாக்கப் பயிற்சியகங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை,  அருள்பணியாளர் உருவாக்கப் பயிற்சியகங்கள் “திருஅவைக்கு நம்பிக்கையின் அடையாளம்” என்று குறிப்பிட்டார்.

எழுத்தாளர் ஜி. கே. செஸ்டர்டனை மேற்கோள் காட்டி, “வாழ்க்கையிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்டதை நீக்குவது அதை மிகவும் இயற்கையானதாக மாற்றாது, மாறாக இயற்கைக்கு மாறானதாக மாற்றிவிடும்”  என்று அவர்களிடம் திருத்தந்தை எச்சரித்தார்.

மேலும் “அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் கடவுளைப் பற்றிப் பேசுவதைவிட, அவருடைய உடனிருப்பு தத்துவார்த்தமானது என்பதைக் காட்டும் விதமாக வாழ வேண்டும்” என்று அவர்களிடம் திருத்தந்தை லியோ வலியுறுத்தினார்.

“கடவுளுடன் உண்மையிலேயே இணையாமல் அருள்பணித்துவப் பயிற்சிகளுக்குப் பழகும் ஒரு மாணவர் அல்லது அருள்பணியாளர் ஆபத்தில் உள்ளார்” என்று கூறிய திருத்தந்தை, “அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி என்பது, கிறிஸ்துவுடனான உண்மையான, தனிப்பட்ட உறவில் தொடங்குகிறது” என்று அவர்களிடம் எடுத்துக்காட்டினார்.

முதல் திருப்பாடலை மேற்கோள் காட்டி, ஒரு பலனளிக்கும் இறையழைத்தலை நீரோடைகளின் ஓரமாக நடப்பட்ட ஒரு மரத்துடன் ஒப்பிட்ட திருத்தந்தை, அதன் வலிமை என்பது வெளிப்புறத் தோற்றத்தை விட ஆழமான வேர்களில் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

“அதேவேளையில், செயல்பாடும் வெளிப்புற வடிவமும் உண்மையான உள் நம்பிக்கையை மாற்றும்போது ஆன்மிக வாழ்க்கை நின்று கொண்டே இறக்கக்கூடும்” (நற்கனிகள் தராத நிலை) என்று திருத்தந்தை லியோ எச்சரித்தார்.

இறுதியாக, இயேசு தம்முடைய சீடர்களை முதலில் “தம்முடன் இருக்க” அழைத்ததை நினைவுகூர்ந்து, “ஆசிரியருடன் நிலைத்திருக்க” அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்களை ஊக்குவித்து தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.