தலச்சேரி, மார்ச் 13, 2026:  கேரளாவில் உள்ள தலச்சேரி உயர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் ஆல்பா சமய அறிவியல் கல்வி நிலையம் வத்திக்கானின் கலாச்சாரம் மற்றும் கல்வி திருப்பணியகத்தின் அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.  இதன் மூலம் இப்பிராந்தியத்துக்கான இறையியல் படிப்பை இக்கல்வி நிலையம் மேற்கொள்ள முடியும். பெங்களூரூவில் உள்ள தர்மாரம் வித்யா ஷேத்ரம் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு மூன்றாண்டுக்கான இறையியல் படிப்பை ஆல்பா கல்வி நிலையம் வழங்க முடியும்.

இதனை தலச்சேரி பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் தர்மாரம் வித்யா ஷேத்ரம் நிறுவன சிஎம்ஜ அருட்பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் இறையியல் படிப்பில், வேதியர்களும், துறவறச் சபைகளின் அருட்சகோதரிகளும், கல்வித் தகுதியுள்ள ஓய்வுப் பெற்றவர்களும், பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களும் பங்கேற்கலாம்.  தமிழகத்தில் திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியின் கீழ் இறைமக்களுக்கு இறையியல் கல்வி வழங்கப்படுகிறது. தமிழக ஆயர்களின் உரிய வழிகாட்டுதலும் ஆதரவும் உதவியும் இன்றி, செயல்பாடு குறைந்துள்ள நிலையில், ஓர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் இந்தக் கல்வி நிறுவனம் தமிழகத்திற்கு பேரூக்கம் தந்து வழிகாட்டட்டும்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.