புதுதில்லி மார்ச் 13, 2026: இந்தியா மற்றும் நேபாள் நாடுகளுக்கு திருத்தந்தையின் தூதராகச் செயல்பட்டு வரும் 73 வயது நிரம்பிய பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி அவர்களை, திருத்தந்தை லியோ அவர்கள் குரோஷியா நாட்டிற்கான திருத்தூதராக நியமித்து ஆணைப் பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 தேதி நியமிக்கப்பட்ட இவர், இவ்வாண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி தம் மாற்றலாகி உள்ளார் என்பது இங்கே குறிப்பிட்டத்தக்கது. 

மார்ச் 13, 1953 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த இவர், ஜூன் 17, 1978 ஆம் ஆண்டு குருவாகி, ஜூலை 13, 1987 ஆம் ஆண்டு திருத்தந்தையின் அயலக உறவுப் பணியில் அடியெடுத்து வைத்து, கேமரூன், நியுசிலாந்து, அமெரிக்கா, இந்தோனேசியா, கிழக்கு திமூர், சிங்கப்பூர், மலேசியா, புருனே, வியட்நாம், இஸ்ரேல், பாலஸ்தீனம் சைப்ரஸ் இந்தியா நேபாள் உட்பட பல்வேறு நாடுகளில் திருத்தந்தையின் திருத்தூதராகப் பணியாற்றியுள்ளார்.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.