உலகெங்கிலும் உள்ள அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரும் இடம்பெற்று வரும் உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் அமைதியை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி, அனைத்துலக வேண்டுகோள் ஒன்றை திருப்பீட வாழ்வுக் கழகம் வெளியிட்டுள்ளது.

மார்ச் 11, புதன்கிழமையன்று, வெளியிட்ட அறிக்கையொன்றில், வன்முறை மற்றும் போர் அறிவியல் ஆராய்ச்சியைப் பாதிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஆபத்து நிலவும் இவ்வேளையில், அமைதிக்கான நிலைப்பாட்டை எடுப்பதற்கான அழைப்பை இக்கழகம் விடுத்துள்ளது.

“அமைதிக்கான அறிவியலாளர்கள்” என்று தலைப்பிடப்பட்ட இந்த முயற்சி, ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஒப்புரவு மற்றும் மோதல் தீர்வுக் கொள்கைகளை இணைக்க இக்கழகம் ஊக்குவித்துள்ளது.

ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத் துறையால் ஆதரிக்கப்படும் இந்த வேண்டுகோள், தேசியம், கலாச்சாரம், அரசியல் கருத்துக்கள் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்துத் துறைகள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த அறிவியலாளர்களுக்கும் உரியதாக இருக்கின்றது.

பல்வேறு கலாச்சாரங்களுக்கிடையே ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணித்தல், குறிப்பாக, இராணுவம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க மற்றும் அறிவியல் ஆராய்ச்சியை அமைதியை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகப் பார்ப்பது ஆகியவை இக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட சில செயல்களில் அடங்கும்.

மனித வாழ்க்கையை ஆதரிக்கும் மற்றும் பாதுகாக்கும் பல்துறை ஆய்வுகளை வளர்ப்பதற்கான அதன் நோக்கத்துடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது என்று தெரிவித்துள்ள திருப்பீட வாழ்வுக் கழகம்,  அறிவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் இந்த வேண்டுகோளில் கையெழுத்திடலாம் என்று கூறியுள்ளது.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.