CBCI Letter for Peace


இலத்தின் ரீதி இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், துறவியர்கள், வேதியர்கள் மற்றும் இறைமக்கள் அனைவருக்கும்.


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
மத்திய கிழக்கு நாடுகளில் தலைதூக்கும் வன்முறை மற்றும் அமைதியின்மை ஆகியவற்றால் இந்நாட்களில், ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் அண்மைக்காலங்களில் வெறுப்புணர்வு தலைதூக்கும் பின்னனியில் ஒட்டுமொத்த லத்தின்ரீதியிலான இந்தியத் திருஅவை முழுவதையும் செபத்தில் ஒன்றித்து அமைதிக்காக இறைஞ்சும்படி அன்புடன் அழைக்கிறேன்.


போரினால் ஏற்பட்டுள்ள துயரமும் நிச்சயமின்மையும் ஒட்டுமொத்த மனித குடும்பத்தை மிகவும் காயப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்தியாவிலிருந்து அங்கு வேலைசெய்து வாழும் நம்முடைய சகோதர சகோதரிகளை நாம் குறிப்பாக இங்கே நினைவுகூருகிறோம். தொலை தூரத்திலிருந்து அவர்கள் தங்களுடைய குடும்பங்களுக்கு தம் உழைப்பால் உதவுகின்றனர்: நம் நாட்டிற்கும் நம் திருஅவைக்கும் தங்களின் தாரளமாக பங்களிப்புச் செய்கின்றனர். நிச்சயமற்ற தன்மை நிலவும் இந்நேரத்தில், நம் ஆண்டவரின் பாதுகாப்பில் அவர்களைச் சிறப்பாக ஒப்படைக்கிறோம். அவர்களின் பாதுகாப்பிற்காகவும் உடல் உள்ள நலத்திற்காகவும் நாம் செபிக்கிறோம்.


உண்மையான நிலையான அமைதியைத் தருபவருமான நம் இறைவனின் பேரிரக்கத்தில் இந்த கடினமானச் சூழ்நிலையை ஒப்படைத்து செபிக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆகையால் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி, அமைதிக்காக செபிக்கும் நாளாக அனுசரிக்கும்படி தங்களை ஊக்கப்படுத்துகிறேன். குறிப்பாக, அன்று திருப்பலி ஒப்புக்கொடுக்கும் போது மத்திய கிழக்கு நாடுகளில் அமைதிக்காக சிறப்புச்செபங்களை அர்ப்பணிக்கும்படி தங்களை வேண்டுகிறேன். பகைமையுணர்வு முடிவுக்கு வரவும், அப்பாவி உயிர்களின் பாதுகாப்பிற்காகவும் உலகத் தலைவர்களிடையே கட்டுப்பாடும் அவர்களின் ஞானத்திற்காகவும் விசுவாசிகள் மன்றாட்டின்போது சிறப்புக் கருத்தாக இதனை உள்ளடக்கி செபிக்கலாம்.


மேலும் இறைமக்கள் அனைவரையும் மார்ச் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மார்ச் மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை வரை திருச்செபமாலை ஒப்புக்கொடுத்து செபிக்கும்படி அழைக்கிறேன். இந்த மரியன்னை பக்தி முயற்சியில் அனைவரும் ஒன்றித்து, அமைதியின் அரசியான நம் அன்னை மரியாவின் பரிந்துரையால் ஒப்புரவு ஏற்படவும் உரையாடல் நிகழவும் தற்போதுள்ள மோதல் சூழ்நிலைக்கு முடிவு வரவும் செபிப்போம்.


மேலும் வரும் வெள்ளிக்கிழமை மார்ச் மாதம் 13 ஆம் தேதி ஒவ்வொருவரும் ஒருநாள் உண்ணா நோன்பு கடைபிடித்து உலக அமைதிக்காகவும் வன்முறை மற்றும் குழப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கப் பெறவும் தங்களின் தியாகத்தை அர்ப்பணிக்க தங்களை ஊக்கப்படுத்துகிறேன்.


நமது ஒருங்கிணைந்த செபமும் தவமும் தோழமையும் எல்லாம் வல்ல இறைவனின் முன்பு ஓர் எளிய ஆனால் அதே சமயம் இடைவிடாத வேண்டுதலாக மாறி, இதயங்கள் மாற்றப்படவும், பகைமை முடிவுக்கு வரவும் அமைதி நிலைபெறவும் உதவுவதாக.


மேமிகு கர்தினால் பிலிப் நேரி பெர்ரோ
தலைவர், அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை
பேராயர், கேவா – டாமன் உயர்மறைமாவட்டம்
மார்ச் 03, 2026
அகில இந்திய ஆயர் பேரவையின் செயலகம், புதுதில்லி

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.