ஈரானோடு போர் நடைபெற்று வரும் நிலையில், லெபானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் முகாம்மேல் தாக்குகிறோம் என்ற பெயரில் தன் எல்லையிலிருந்து லெபானான் மீது இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் தாக்குதல் நடத்தின. அப்படி அவர்கள் நடத்திய பீரங்கி தாக்குதலில் தாக்குதலில் லெபனோனில் உள்ள மரோனைட் அருள்பணியாளார் பியர் எல்-ரஹி என்பவர் கொல்லப்பட்டார். இஸ்ரேலிய பீரங்கிகளின் குண்டுகள் அவர்தம் பங்கான கிளயாவில் உள்ள வீடுகள் மீது விழுந்தன. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட தம் பங்குமக்களின் இல்லங்கள் தாக்குதலுக்குள்ளாக சொல்லண்ணா வேதனை அடைந்தனர். அப்படி பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உதவி செய்ய பங்குத்தந்தை பியர் எல்-ரஹி ஓடிவந்தாhர். அப்படி அவர்களுக்கு இடிபாடுகளுக்கிடையே நின்று உதவி கொண்டிருந்தபோது 50 வயதான அருள்பணியாளர் எல்-ரஹி காயமடைந்தார். அப்பகுதியிலிருந்து வெளியேற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டபோதிலும், கிளயாவின் பங்குத்தந்தையான அவர் தனது பங்குத்தள மக்களுக்குப் பணியாற்றுவதைத் தொடர்ந்தார். குண்டடிப்பட்டு கடும் காயத்தோடு அவர் வீர மரணம் அடைகிறவரை தனது மேய்ப்பணி பராமரிப்பின் உணர்வை அவர் வெளிப்படுத்தினார்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அவரது சக அருள்பணியாளரான அருள்தந்தை டூஃபிக் பௌ மெர்ஹி அவர்கள், அருள்பணியாளர் எல்-ரஹி அவர்களை அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவச் சமூகத்திற்குப் பணியாற்றிய அர்ப்பணிப்புள்ள மேய்ப்பர் என்று விவரித்தார். மேலும் அங்குத் தாக்குதல்கள் தொடர்வதால் அந்தப் பகுதியில் இப்போது ஏற்பட்டுள்ள பெரும் அச்சம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களின் மனித மாண்பை நிலைநாட்ட வலியுறுத்தியும், அமைதிக்கான திருத்தந்தையின் அழைப்பை எடுத்துக்காட்டியுள்ள அருள்பணியாளர் மெர்ஹி அவர்கள், “போரும் வன்முறையும் போதும், நாங்கள் கொஞ்சம் மாண்புடன் வாழ மட்டுமே வேண்டுகிறோம்” என்று தனது வேதனை நிறைந்த உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
