பெங்களூரூ, மார்ச் 13, 2026: இந்திய ஆயர்பேரவையின் கீழ் செயல்படும் தேசிய திருவிவிலிய மறைக்கல்வி மற்றும் திருவழிபாட்டு நடுநிலையமான NBCLC, கர்நாடக ஆயர்பேரவையின் பல்சமய உரையாடலுக்கான பணிக்குழுவுடன் இணைந்து இப்தார் நோன்பைத் திறந்தது. இந்நடுநிலையத்தின் இயக்குநர் அருள்முனைவர் பேப்டிஸ்ட் அவர்களும் கர்நாடக ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் செயலர் அருட்பணியாளர் வினய் குமார் அவர்களும் இணைந்து பல்சமயங்களுக்கிடையேயான தோழமை, புரிந்துணர்வு, உரையாடல் மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதற்கான முன்னெடுப்பாக இந்நிகழ்வை மேற்கொண்டனர்.

இதில் திரு.அக்பர் அலி அவர்களும் பெள்ளி மடாதிபதி சுவாமி சிவருத்ராவும் புத்தகுரு வணக்கத்திற்குரிய செல்லோன் அவர்களும் திருமதி ஹன்சா அவர்களும் அருட்சகோதரி கிளாரிஸ் அவர்களும் கலந்து கொண்டு பல்சமய நல்லுணர்வு சிந்தனைகளையும் செபங்களையும் வழங்கி இந்நிகழ்வை இறைமையால் நிறைத்தனர். வரவேற்பை NBCLC, மைய இயக்குநர் அருள்முனைவர் ஜான் பாப்டிஸ்ட் அவர்களும் நன்றியுரையை பல்சமய உரையாடல் பணிக்குழுவின் செயலர் அருட்பணியாளர் வினய் குமார் அவர்களும் வழங்கினர்.
தமிழக ஆயர்பேரவையின் கீழ் செயல்படும் பல்சமய உரையாடல் பணிக்குழுவும் இப்படிப்பட்ட இப்தார் நோன்பைத் திறந்து தங்களின் தோழமையையும் உடனிருப்பையும் வெளிப்படுத்தி இரண்டாம் வத்திக்கான் சங்கம் முன்னெடுக்கும் விழுமியங்களை விதைக்கலாம்.
