Pope FrancisPapal Vistit by Pope Leo
Pope Leo
Papal Vistit by Pope Leo

ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் மொனாக்கோவிற்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளவிருப்பதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவித்துள்ளது.
மொனாகோக்விற்கு ஒரு நாள் திருத்தூதுப் பயணம்
மார்ச் 28 ஆம் தேதி சனிக்கிழமையன்று, மொனாக்கோ சிற்றரசுக்கு ஒரு நாள் திருத்தூதுப் பயணமாகத் திருத்தந்தையின் முதல் பயணம் அமைகிறது. தற்காலத்தில் இந்நாட்டிற்கான முதல் திருத்தந்தையின் பயணமாக இது உள்ளது. இதன் மூலம் மொனாக்கோ அதிகாரிகளின் நீண்டகால அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அவரது பயணம் அமைந்துள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் திருத்தூதுப் பயணம்
பிறகு ஏப்ரல் 13 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வியாழக்கிழமை வரை, அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் திருத்தந்தை மேற்கொள்வார்.
பத்து நாள்கள் உள்ளடக்கிய இந்தத் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை அல்ஜியர்ஸ் மற்றும் அன்னாபா; யாவுண்டே, பமெண்டா மற்றும் டுவாலா; லுவாண்டா, முக்சிமா மற்றும் சௌரிமோ; மேலும் மலாபோ, மொங்கோமோ மற்றும் பட்டா உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்வார்.
திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணம், அமைதி, ஏழைகளுடனான ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவை வலியுறுத்துவதாக இருக்கும். மேலும் இதில் கேமரூனின் மோதலால் பாதிக்கப்பட்ட ஆங்கிலோஃபோன் மாநிலத்தின் பகுதியிலுள்ள மக்களையும் திருத்தந்தை சந்திக்கிறார்.
ஸ்பெயின் நாட்டில் திருத்தூதுப் பயணம்
இறுதியாக, ஜூன் 6 ஆம் தேதி , சனிக்கிழமை முதல் ஜூன் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை, ஸ்பெயினிலுள்ள மாத்ரித், பார்சலோனா, டெனெரிஃப் மற்றும் கிரான் கனாரியா ஆகிய இடங்களுக்குத் திருத்தூதுப் பயணம் திருத்தந்தை மேற்கொள்வார்.
பார்சலோனாவில், கட்டிடக் கலைஞர் அந்தோணி கௌதியின் இறப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், திருக்குடும்ப பேராலயத்தின் புதிய மற்றும் மிக உயரமான கோபுரத்தை திருத்தந்தை திறந்து வைப்பார்.
உலகளாவிய மேய்ப்புப் பணிப் பயணம்
இந்த மூன்று திருத்தூதுப் பயணங்களும், பல்வேறு கலாச்சார, அரசியல் மற்றும் மதச் சூழல்களில் திருத்தந்தையின் தொடர்ச்சியான உலகளாவிய மேய்ப்புப் பணிப் பயணத்தைப் பிரதிபலிக்கின்றன.

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.