Category: வத்திக்கான்

வத்திக்கான் நகர நிர்வாகத் தலைவராக அருள்சகோதரி Raffaella Petrini

வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச்செயலராக பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்சகோதரி Raffaella Petrini அவர்கள், வருகின்ற மார்ச் 1, சனிக்கிழமை முதல் வத்திக்கான் நகர நிர்வாகத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கின்றார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. வத்திக்கான் நகர மாநிலத்திற்கான…

கலை என்னும் உலகளாவிய மொழி – திருத்தந்தை பிரான்சிஸ்

உலகளாவிய மொழியாகிய கலையின் முக்கியத்துவத்தை நினைவுகூரவும், அதன் அழகை மக்களிடத்தில் பரவச் செய்து, அவர்களை ஒன்றிணைத்து, உலகிற்கு நல்லிணக்கத்தைக் கொண்டு வரவும், கலை மற்றும் கலாச்சார விழா சிறப்பிக்கப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தனது மூவேளை செப உரைக் கருத்தில் தெரிவித்துள்ளார்…

திருத்தந்தை பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் நலமாக உள்ளார்

உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் Bronchitis எனப்படும் மூச்சுக்குழல் அழற்சி நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது நலமுடன் இருப்பதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயு புரூனி செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். பிப்ரவரி 15, சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ்…

குவாத்தமாலா பேருந்து விபத்து குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை

பிப்ரவரி 10ஆம் தேதி திங்களன்று குவாத்தமாலா நாட்டில் 56 பேரின் உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்து குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் வெளியிடும் இரங்கல் தந்தியை திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்அந்நாட்டுத் திருஅவைக்கு அனுப்பியுள்ளார் . பிப்ரவரி 10ஆம்…

ஸ்லோவாக்கிய பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் Robert Fico அவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். ஏறக்குறைய 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் தனியாக உரையாடியபின் தங்களுக்குள் பரிசுப் பொருட்களையும் பரிமாறிக்கொண்டனர்.…

மூச்சுக்குழல் தொடர்பான சிகிச்சைக்கென மருத்துமனையில் திருத்தந்தை

Bronchitis எனப்படும் மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்படிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அது தொடர்பான சிகிச்சைக்கென உரோம் நகரின் அகுஸ்தீனோ ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை காலையில் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஸ்லோவாக்கியா பிரதமர் Robert Fico,…

புலம்பெயர்ந்தோர் விடயத்தில் அமெரிக்க ஆயர்களை ஆதரிக்கும் திருத்தந்தை!

புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் மாண்பை பாதுகாப்பதற்கான அமெரிக்க ஆயர்களின் முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் . பிப்ரவரி 10, திங்கள்கிழமையன்று எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு ஆதரவான அமெரிக்க ஆயர்களின்…

இசை என்பது அமைதிக்கான கருவியாக அமைகிறது! -திருத்தந்தை

“போர்கள் குழந்தைகளை அழிந்துவரும் வேளையில், இசை என்பது அமைதிக்கான கருவியாக அமைகிறது!” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார் . மக்கள் மத்தியில் அமைதி மற்றும் சகவாழ்வை வளர்ப்பதில் இசையின் ஆற்றலை வலியுறுத்தி, இத்தாலியிலுள்ள சான்ரெமோவில் பிப்ரவரி 11, செவ்வாயன்று தொடங்கி நிகழ்ந்து…

மார்ச் & ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும் திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்!

இவ்வாண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நிகழவிருக்கும் திருவழிபாட்டு விழாக்களுக்கான கால அட்டவணையை வத்திக்கானின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது . இதன்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் மாதங்களில் பல திருவழிபாட்டு விழாக்களுக்குத் தலைமை ஏற்கிறார்.…

வத்திக்கானில் கலைஞர்களுக்கான விழா தொடங்க உள்ளது

கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகத்தின் விழா பிப்ரவரி 15 முதல் 18 வரை வத்திக்கானில் இடம்பெற உள்ளது என்று கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் José Tolentino de Mendonça பிப்ரவரி 12, புதனன்று திருப்பீடச் செய்தித் தொடர்பக…