இயேசுவிடம் நமது இதயத்தின் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்குகளை உரக்க எடுத்துரைப்போம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசு தீமையை வென்றார், சிலுவையை ஒரு பாலமாக மாற்றி உயிர்ப்பை அடைந்தார் என்றும், ஒவ்வொரு நாளும் நாம் கைகளை உயர்த்தி அவரைப் புகழ்ந்து போற்றி செபிக்க வேண்டும் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 15 திங்கள்கிழமை ஹேஸ்டாக் வாழும் செபம் என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களைத் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதயத்திலிருந்து எழுகின்ற உறுதியான செபத்தையே இறைவன் விரும்புகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவிடம் நமது இதயத்தின் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்குகளை உரக்க எடுத்துரைப்போம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், நமது இதயத்தின் இரகசியங்களையும் அவரிடம் சொல்லுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு தீமையை வென்றார். சிலுவையை ஒரு பாலமாக மாற்றி உயிர்ப்பை அடைந்தார். ஒவ்வொரு நாளும் அவரைப் புகழ்வதற்காகவும் போற்றுவதற்காகவும் நமது கைகளை அவரை நோக்கி உயர்த்துவோம். இயேசுவிடம் நமது இதயத்தின் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்குகளை உரக்க எடுத்துரைப்போம், நமது இதயத்தின் இரகசியங்களை அவரிடம் சொல்லுவோம். இத்தகைய வாழும் செபத்தை, இதயத்திலிருந்து உருவான உறுதியான செபத்தையே இறைவன் விரும்புகின்றார் என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்