திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

ஆழ்நிலை அருள்சிந்தனை வாழ்வுக்கான பாதை என்பது இயல்பாகவே அன்பின் பாதை. அது நம்மை கடவுளிடம் உயர்த்தும் ஏணியாகச் செயல்படுகிறது, உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்க அல்ல, ஆனால் நாம் பெற்ற இறையன்பின் சாட்சிகளாக நம்மை அதில் ஆழமாக நிலைநிறுத்துகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஏப்ரல் 18, இவ்வியாழனன்று, காலணி அணியா கார்மெல் சகோதரிகள் சபையின் குழுமத் தலைவியர் மற்றும் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, உங்கள் சபை சட்ட நூலின் திருத்தத்திற்கான உங்களின் இந்தச் சந்திப்பு என்பது ஒரு குறிப்பிடத் தக்க செயலாகும் என்றும் உரைத்தார்.

சபை சட்ட நூலில் திருத்தங்களை ஏற்படுத்துவது என்பது, எதிர்காலத்தைப் பார்ப்பதற்காக கடந்த காலத்தை நினைவுபடுத்துவது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, உண்மையாகவே, ஆழ்நிலை அருள்சிந்தனை வாழ்வுக்கான அழைப்பு (contemplative vocation) என்பது, இறைவனின் இறையன்புத்தீயை பராமரிப்பது மட்டுமல்ல, மாறாக, திருஅவைக்கும் உலகிற்கும் அரவணைப்பை வழங்கக்கூடிய அதனை இன்னும் அதிகரிக்கச் செய்வது என்றும் எடுத்துக்காட்டினார்.

அமைதிக்கும் இறைவேண்டலுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட நேரம் அவசியம் என்பதை உங்கள் அன்னை குழந்தை இயேசுவின் புனித தெரசா தெளிவுபடுத்தியுள்ளார் என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை,  இருப்பினும், இதனைத்  திருத்தூதுப் பணிகள் மற்றும், திருஅவைக்குப் பணியாற்ற இறைவன் நம்மை அழைக்கும் அனைத்து அன்றாட கடமைகளின் ஊற்றாகவும் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நற்செய்தி நம்பிக்கை (Evangelical hope) என்பது கடவுளிடம் நம்மை சரணடையச் செய்வது, எதிர்காலத்தைத் தெளிந்து தேர்வு செய்வதற்கு அவர் நமக்குக் கொடுக்கும் அறிகுறிகளைப் படிக்கக் கற்றுக்கொள்வது என்பதுடன், சில துணிவு மற்றும் ஆபத்தான முடிவுகளை எடுக்கும் வலிமையை நமக்குத் தருகிறது என்று கூறினார் திருத்தந்தை.

தற்காப்பு உத்திகள் பெரும்பாலும் கடந்த காலத்திற்கான துயரம் நிறைந்த ஏக்கத்தின் பலனாகும், அதேவேளையில், நற்செய்தி நம்பிக்கை என்பது நம் வரலாற்றை நிகழ்காலம் வரை சிந்திப்பதில் மகிழ்ச்சியை அளிக்கிறது, ஆனால் எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கு நமக்கு உரிமையை அளிக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *