இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது ஏனெனில் அவர்கள் நிகழ்காலத்தை அடையாளப்படுத்துகின்றார்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நிகழ்காலத்தை நாம் முழுமையாக வாழாவிட்டால் எதிர்காலம் என்பது இல்லை என்றும், நிகழ்காலத்திலேயே எல்லாமே செயல்படுத்தப்படுகின்றது என்ற விழிப்புணர்வை நாம் உடனடியாகப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் திருஇருதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் 100 ஆவது ஆண்டை முன்னிட்டு மிலானில் உள்ள “Giuseppe Toniolo” பல்கலைக்கழகத்தின் தலைவரும் மிலான் உயர் மறைமாவட்ட பேராயருமான மாரியோ தெல்ஃபீனி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருப்பீட செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

இளைஞர்களே உங்களது இடத்திற்காக இன்றேப் போராடுங்கள் ஏனெனில் வாழ்க்கை இன்றைக்கானது என்று பனாமாவில் நடைபெற்ற உலக இளயோர் நாளின் போது திருத்தந்தை பிரான்சிஸ் கூறிய கருத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது ஏனெனில் அவர்கள் நிகழ்காலத்தை அடையாளப்படுத்துகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.   

பல்கலைக்கழகத்தில் அமைதி மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அதிக ஆர்வம் வெளிப்பட வேண்டும் என்றும், உண்மைக்கான பொதுவான தேடல், அதன் புரிதல்கள், தாராளமான அன்பு, செவிசாய்த்தல், உதவிசெய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய அறிவின் சமூகத்தில் அத்தனையும் வாழப்படுகின்றது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பரோலின்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

By