Tag: #popefrancis

உலகிற்கு நம்பிக்கை அருளும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள் -திருத்தந்தை

திருப்பயணிகளாக இருப்பது என்பது திருஅவைக்குள் ஒன்றிணைந்து நடப்பதைக் குறிக்கிறது, ஆனால் இது வெளியே சென்று மற்றவர்களைச் சந்திக்கும் துணிவையும் கொண்டுள்ளது என்றும், நம்பிக்கையைக் கொண்டுவருவது என்பது நற்செய்தியில் வேரூன்றிய ஓர் உயிருள்ள வார்த்தையை உலகுக்கு வழங்குவது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்…

புதிய அருளாளர் ஜியோவன்னி மெர்லினி  அமைதியின் தூதுவர்

அருளாளர் ஜியோவன்னி மெர்லினி அவர்கள், மக்களுக்கான மறைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்றும், பல மக்களின் ஆன்மாக்களுக்கு விவேகத்துடன் ஆலோசனைகள் பல வழங்கி அமைதியின் தூதுவராக திகழ்ந்தார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். சனவரி 12 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு…

குருத்துவத்துக்கான அடையாளத்தை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்!

இறையழைத்தல் என்பது நம் வாழ்வுக்கான கடவுளின் வடிவமைப்பு, கடவுள் நம்மில் எதைப் பார்க்கிறார், அவரது அன்பான பார்வையை நகர்த்துவது எது என்பதை அறிவது என்றும், ஒரு குறிப்பிட்ட வழியில், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பே, நமது உண்மையான சாரத்தின் ஆணிவேராக அமைகிறது…

அமெரிக்க அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 47 ஆவது அரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் ஜே. டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். சனவரி 20 திங்கள் கிழமை அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாற்பத்து ஏழாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்டு அவர்கள்…

59-வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான திருத்தந்தையின் செய்தி

நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து பணிவோடும் மரியாதையோடும் பகிருங்கள், (1 பேதுரு 3:15-16) என்ற புனித பேதுரு அவர்களின் முதல் திருமடல் வார்த்தைகளை தலைப்பாகக் கொண்டு 59வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். தவறான தகவல்கள் மற்றும்…

சான்றளிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பர்களாக இருக்கவேண்டும்- திருத்தந்தை பிரான்சிஸ்

கல்விச் சமூகத்திற்குள் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அருள்பணித்துவ மாணவர்கள் தொடர்ந்து சான்றளிப்பது அவசியம் என்றும், தாங்கள் அனுப்பப்படும் தலத்திருஅவை, பங்குத்தளம், இயக்கம், அமைப்பு, குடும்பம் போன்றவற்றில் சமூக உருவாக்கத்தை ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார். சனவரி 25 சனிக்கிழமை…

தகவல் தொடர்புப் பணி என்பது உருவாக்கும் பணி

சமூகத்தொடர்பு என்பது தன்னிடமிருந்து சற்று வெளியேறி, நம்மைப் பிறருக்குக் கொடுப்பது, கிறிஸ்து நமக்குக் கூறுவதை எடுத்துரைப்பது என்றும், வெளியேறுதல் மட்டுமல்ல மாறாக, மற்றவர்களைச் சந்தித்தலே உண்மையான தகவல் தொடர்பு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். சனவரி 25 சனிக்கிழமை திருத்தூதர் பவுல்…

33 வது உலக நோயுற்றோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

நோயுற்ற காலத்தில், உடல், உளவியல் மற்றும் ஆன்மிக ரீதியாக நாம் நமது அனைத்து பலவீனங்களையும் உணரும் வேளையில், நமது துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கடவுளின் நெருக்கத்தையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம் என்றும், துன்பமும் துயரமும் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ள நாம் நங்கூரமிடக்கூடிய அசைக்க…

நமது எதிர்நோக்கு அன்பிலிருந்து பிறந்தது மற்றும் அன்பில் நிறுவப்பட்டது!

நமது எதிர்நோக்கு அன்பிலிருந்து பிறந்தது மற்றும் அன்பில் நிறுவப்பட்டது என்றும், மனித பாவத்தால் ஏற்படும் அழிவுகளுக்கு மத்தியிலும், அன்பின் புதிய நாகரிகத்தை உருவாக்க இந்த அன்பு நம்மை அழைக்கிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். ஜனவரி 29, புதன்கிழமையன்று, கியூபா நாட்டின்…

மக்களின் துயரங்களில் அருள்பணியாளர்கள் வடிவமைக்கப்பட வேண்டும்!

ஓர் அருள்பணியாளராக வாழ்வதென்பது. மற்றொரு கிறிஸ்துவாக வாழ்வது என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும், மக்களின் துயரங்களில் அருள்பணியாளர்கள் வடிவமைக்கப்பட வேண்டும்! என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். ஜனவரி 30, வியாழக்கிழமை வலென்சியாவின் ஆயர்கள், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் மற்றும் உருவாக்கப் பயிற்சியாளர்களைத் திருப்பீடத்தில்…