ஒவ்வொரு குழந்தையும் கைவிடப்படும்போது, வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படும்போது, மருத்துவ மற்றும் கல்வி வசதிகள் இன்றி விடப்படும்போது அது இறைவனை நோக்கிய அழுகுரலாகின்றது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அடிமைத்தனத்தையொத்த நிலைகளில் வாழும் பல இலட்சக்கணக்கான குழந்தைகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு குழந்தையும் கைவிடப்படும்போது, வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படும்போது, மருத்துவ மற்றும் கல்வி வசதிகள் இன்றி விடப்படும்போது அது இறைவனை நோக்கி எழுப்பப்படும் அழுகுரலாக இருக்கும் என ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை தன் டுவிட்டர் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிமைத்தனத்தையொத்த நிலைகளில் வாழும் பல இலட்சக்கணக்கான மக்களுக்காக இன்றிணைந்து செபிப்போம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார்.
திருஅவையில் முதன்முறையாக சிறப்பிக்கப்படவிருக்கும் உலக குழந்தைகள் தினம் குறித்து கடந்த ஆண்டே அறிவிப்பை வெளியிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தினக்கொண்டாட்டங்கள் இவ்வாண்டு மே மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் உரோம் நகரில் இடம்பெறும் எனவும், ஒவ்வொரு மறைமாவட்டமும் தங்கள் பகுதியில் இந்நாளை குழந்தைகளுடன் சிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்