Category: திருத்தந்தை

அமெரிக்க அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 47 ஆவது அரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் ஜே. டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். சனவரி 20 திங்கள் கிழமை அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாற்பத்து ஏழாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்டு அவர்கள்…

59-வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான திருத்தந்தையின் செய்தி

நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து பணிவோடும் மரியாதையோடும் பகிருங்கள், (1 பேதுரு 3:15-16) என்ற புனித பேதுரு அவர்களின் முதல் திருமடல் வார்த்தைகளை தலைப்பாகக் கொண்டு 59வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். தவறான தகவல்கள் மற்றும்…

சான்றளிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பர்களாக இருக்கவேண்டும்- திருத்தந்தை பிரான்சிஸ்

கல்விச் சமூகத்திற்குள் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அருள்பணித்துவ மாணவர்கள் தொடர்ந்து சான்றளிப்பது அவசியம் என்றும், தாங்கள் அனுப்பப்படும் தலத்திருஅவை, பங்குத்தளம், இயக்கம், அமைப்பு, குடும்பம் போன்றவற்றில் சமூக உருவாக்கத்தை ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார். சனவரி 25 சனிக்கிழமை…

33 வது உலக நோயுற்றோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

நோயுற்ற காலத்தில், உடல், உளவியல் மற்றும் ஆன்மிக ரீதியாக நாம் நமது அனைத்து பலவீனங்களையும் உணரும் வேளையில், நமது துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கடவுளின் நெருக்கத்தையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம் என்றும், துன்பமும் துயரமும் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ள நாம் நங்கூரமிடக்கூடிய அசைக்க…

கத்தோலிக்கர் வரலாற்றின் கதாநாயகர்களாக செயல்படவேண்டும் – திருத்தந்தை

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் நீதி மற்றும் அமைதிச் செயலகத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள கத்தோலிக்க சமூகப்பணி கூட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், ஒப்புரவு, ஒன்றிணைத்தல் மற்றும் சகோதரத்துவம் என்பவைகளின் பாலத்தைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார். வரலாற்றின் கதாநாயகர்களாக, முன்னோடிகளாக…

இறைவார்த்தை என்பது தற்காலிகமாக தோன்றி மறையும் உணர்வல்ல – திருத்தந்தை

இறைவார்த்தை என்பது ஒரு புலனாகாத கருத்தாகவோ தற்காலிகமாக தோன்றி மறையும் உணர்வாகவோ ஒரு நாளும் இருக்கமுடியாது என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். இறைவார்த்தையின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் குறித்து ஜனவரி 28, செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில்…

ஏழைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்திடுங்கள்!

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் பணிகளில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் திருஅவையின் இரக்கம்மிகு கதவுகளை அவர்களுக்கு அகலமாகத் திறக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்திய இலத்தீன் வழிபாட்டுக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (சிசிபிஐ)…

நமது எதிர்நோக்கு அன்பிலிருந்து பிறந்தது மற்றும் அன்பில் நிறுவப்பட்டது!

நமது எதிர்நோக்கு அன்பிலிருந்து பிறந்தது மற்றும் அன்பில் நிறுவப்பட்டது என்றும், மனித பாவத்தால் ஏற்படும் அழிவுகளுக்கு மத்தியிலும், அன்பின் புதிய நாகரிகத்தை உருவாக்க இந்த அன்பு நம்மை அழைக்கிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். ஜனவரி 29, புதன்கிழமையன்று, கியூபா நாட்டின்…

மக்களின் துயரங்களில் அருள்பணியாளர்கள் வடிவமைக்கப்பட வேண்டும்!

ஓர் அருள்பணியாளராக வாழ்வதென்பது. மற்றொரு கிறிஸ்துவாக வாழ்வது என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும், மக்களின் துயரங்களில் அருள்பணியாளர்கள் வடிவமைக்கப்பட வேண்டும்! என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். ஜனவரி 30, வியாழக்கிழமை வலென்சியாவின் ஆயர்கள், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் மற்றும் உருவாக்கப் பயிற்சியாளர்களைத் திருப்பீடத்தில்…

அல்பேனிய பேராயர் அனஸ்தாஸ் மறைவிற்குத் திருத்தந்தை இரங்கல்!

ஜனவரி 25, சனிக்கிழமையன்று, அல்பேனிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர் பேராயர் அனஸ்தாஸ் அவர்கள் இறைபதம் அடைந்ததையொட்டி, இரங்கல் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். பேராயர் அனஸ்தாஸ் உடனான தனது தனிப்பட்ட சந்திப்புகளை இந்தச் செய்தியில் நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்…