மார்ச் 1, சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி அஜ்மீர் மறைமாவட்டத்தைச் சார்ந்தவரும், புனித பவுல் பள்ளியின் முதல்வருமான அருள்பணி John Carvalho அவர்களை அஜ்மீர் மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார் .
புதிய ஆயர் John Carvalho
1969-ஆம் ஆண்டு ஏப்ரல் 10, அன்று உடுப்பி மறைமாவட்டத்தில் உள்ள மார்கோலியில் பிறந்தவர் புதிய ஆயர் John Carvalho. மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இளங்கலைப்பட்டமும், நிர்மலா நிகேதனில் சமூகப்பணியில் முதுகலைப்பட்டமும் பெற்றவர்.
1996-ஆம் ஆண்டு மே 13 அன்று குருத்துவ அருள்பொழிவுபெற்ற ஆயர் அவர்கள், பங்குத்தந்தை, உதவிப்பங்குத்தந்தை, பள்ளி, கல்லூரிகளின் முதல்வர், மறைமாவட்ட சமூகப்பணிக் குழுக்களின் பொறுப்பாளர் என பல்வேறு பொறுப்புக்களை சீரும் சிறப்புமாக ஆற்றியவர்.
கோடாவில் உள்ள புனித பவுல் ஆலய உதவிப்பங்குத்தந்தை (1996 – 1999), லாட்புராவில் உள்ள புனித தெரசா பங்கின் பொறுப்பாளர் (1999–2001), உரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட சமூகசேவை சங்கத்தின் இயக்குநர் (2001-2007), பவானிகேராவின் தூர் நகர புனித மார்ட்டின் ஆலயப் பொறுப்பாளர், மற்றும் அஜ்மீரில் உள்ள புனித பவுல் பள்ளியின் தலைவர் (2010-2015), பள்ளி, கல்லூரியின் ஆலோசனை உறுப்பினர் (2013-2018), வல்லப் நகர் புனித பவுல் ஆலயத்தின் பங்குத்தந்தை (2015-2020), கோட்டா கல்வி ஆணையத்தின் செயலாளர் (2020-2023), புனித பவுல் பள்ளியின் முதல்வர் (2020 முதல்) என பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர்.