பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு ஆயராக அருட்பணியாளர் பாபியான் டோப்போ (64) அவர்களை நியமித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மார்னிங் ஸ்டார் வட்டார குருமடத்தில் ஆன்மீக இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் இவர், டிசம்பர் 21, 1960 அன்று சத்திஸ்கரில் உள்ள ஜாஸ்பூர் மறைமாவட்டத்தில் பிறந்தார். டிசம்பர் 3, 1994 அன்று ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்காக குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். உரோமையில் உள்ள உர்பானியா பல்கலைக் கழத்தில் விவிலிய இறையியலில் முனைவர் பட்டமும் திருஅவைச்சட்டத்தின் நிர்வாகச் சட்டப்பிரிவுகளில் பட்டயப்படிப்பும் படித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் மார்னிங் ஸ்டார் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் ஆன்மீக இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.