Month: March 2025

கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தும் திருத்தொண்டர் பணி

இறைவார்த்தையை அறிவிப்பதற்கும், பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் தங்களை அர்ப்பணித்திருக்கும் திருத்தொண்டர்கள் அனைவரும், தங்களது வார்த்தையாலும் செயலாலும் திருஅவைப் பணியினை ஆற்றி வருகின்றார்கள் என்றும், கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் அனைவரிடத்திலும் பகிர்ந்து வருகின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் . பிப்ரவரி 23,…

ஜெமெல்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சுய நினைவுடன் இருக்கின்றார் என்றும், உடல்நிலை மோசமாக இருந்தாலும், மூச்சுத்திணறல் பிரச்சனை எதுவும் இல்லை என்றும் திருப்பீடச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் திருத்தந்தையின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வரும்…

மருத்துவ சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கின்றார் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கின்றார் என்றும், அவர் இன்னும் முழுவதுமாகக் குணமடையவில்லை என்றபோதிலும், ஆபத்தின் எல்லையைத் தாண்டவில்லை என்றும் ஜெமெல்லி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செர்ஜியோ அல்ஃபியேரி எடுத்துரைத்தார் பிப்ரவரி 21 வெள்ளிக்கிழமை மாலை, உரோம்…

உடல்நிலை தேறி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் நுரையீரல் அழற்சி நோய்க்கென சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு வருவதாக இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. பிப்ரவரி 21, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையின் உடல்நிலை குறித்து ஜெமெல்லி மருத்துவ…

ஞானியர் மூவரின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம்!

குழந்தை இயேசுவின்மீது மூன்று ஞானியர் கொண்டிருந்த நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் நாமும் பின்பற்றுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீவிர நுரையீரல் அழற்சி நோய் காரணமாக, உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வேளை, பிப்ரவரி 19, புதனன்று,…

திருத்தந்தையைச் சந்தித்தார் இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி!

ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தையை இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அவர்கள் சந்தித்து அவர் விரைவில் நலம்பெற இத்தாலி அரசு மற்றும் நாட்டின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்தார். பிப்ரவரி 19, புதன்கிழமையன்று பிற்பகல், ஏறத்தாழ 20 நிமிடங்களுக்கு இடம்பெற்ற…

திருத்தந்தையின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது!

பிப்ரவரி 20, வியாழக்கிழமை காலை, ‘திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நேற்றைய இரவை நன்றாகக் கழித்தார் என்றும், இன்று காலை நல்ல உடல்நிலையுடன் விழித்தெழுந்து காலை உணவை நாற்காலியில் அமர்ந்து உட்கொண்டார்’ என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 19,…