Month: March 2025

அஜ்மீர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர் நியமனம்

மார்ச் 1, சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி அஜ்மீர் மறைமாவட்டத்தைச் சார்ந்தவரும், புனித பவுல் பள்ளியின் முதல்வருமான அருள்பணி John Carvalho அவர்களை அஜ்மீர் மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார் . புதிய ஆயர் John Carvalho 1969-ஆம் ஆண்டு ஏப்ரல்…

செயற்கை ஆக்ஸிஜன் சிகிச்சை முறை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது

பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, செயற்கை ஆக்சிஜன் கொடுக்கும் சிகிச்சைமுறை மீண்டும் வழங்கப்பட்டதாகவும், முழு விழிப்புடன் இருக்கும் திருத்தந்தை அவர்கள், மருத்துவ சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அறிக்கை ஒன்றில் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை…

உடலளவில் சோர்வு, ஆனால், மனதளவில் உற்சாகமாக இருக்கும் திருத்தந்தை

திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும், பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்களின் கூற்றை மேற்கோள்காட்டி அறிக்கை ஒன்றை திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது . உடல் நிலையில் முன்னேற்றம்…

திருத்தந்தையின் உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்!

பிப்ரவரி 26, புதன்கிழமை மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலைக் குறித்து பின்வரும் அறிவிப்புகளை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வழங்கியுள்ளது . திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறுநீரகப் பிரச்சனைகள் குறைந்துவிட்ட நிலையில், அவரது உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் இருந்து வருகிறது. அண்மைய…

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்

யூபிலி ஆண்டு 2025 – ஐ முன்னிட்டு இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்னும் தொடர் மறைக்கல்வி உரையினை கடந்த வாரங்களில் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்து வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 26, புதன்கிழமை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்…

திருத்தந்தையின் உடல்நிலை சிறிது முன்னேற்றத்துடன் சீராக உள்ளது!

பிப்ரவரி 25, செவ்வாய் மாலை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை சிறிது முன்னேற்றத்துடன் சீராக உள்ளது என்றும், கடுமையான சுவாசக் கோளாறுக்கான அறிகுறிகள் எதுவும் அவருக்குத் தற்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24,…

நம் விசுவாச வாழ்வு என்பது மனமாற்றத்தின் பயணம்

விசுவாசிகள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கில் ஒன்றிணைந்து நடைபோடவும், நம் வாழ்வை மாற்றியமைக்க கடவுள் விடுக்கும் அழைப்புக்கு செவிமடுக்க இந்த தவக்காலம் தரும் வாய்ப்பை நாம் ஏற்கவும் தயாராக இருப்போம் என தன் தவக்காலச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியுள்ளார் . மார்ச் மாதம்…

புனிதர் பட்ட படிநிலைகளுக்கென ஐவரின் பெயர்கள் ஏற்பு

திருஅவையில் இரு அருளாளர்களை புனிதர்களாக அறிவிப்பது குறித்த தினத்தை தீர்மானிக்க கர்தினால்கள் அவையைக் கூட்டவும், திருமறைக்காக உயிரை இழந்த இருவர், மற்றும் தங்களின் வீரத்துவ பண்புகளுக்காக மூவர் என ஐவரின் பெயர்களை புனிதர் பட்ட படிநிலைகளுக்கென ஏற்கவும் திருத்தந்தை ஒப்புதல் வழங்கியுள்ளார்.…

இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை வெளிப்படுத்தும் திருத்தொண்டர் பணி

திருத்தொண்டர்கள் தங்களது பணியின் வழியாக இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை உருவாக்கும் சிற்பியாகவும், ஓவியராகவும் இருக்கின்றனர் என்றும், தமத்திரித்துவத்தின் மறைபொருளுக்கு சான்றாகத் திகழ்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் . பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருத்தொண்டர்களுக்கான…

வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தைக்காக சிறப்பு செபமாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உடல் நலத்திற்காக பிப்ரவரி 24 திங்கள்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 9 மணியளவில் இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 1,30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சிறப்பு செபமாலை வழிபாடானது நடைபெற இருப்பதாக…