Month: February 2025

கத்தோலிக்கர் வரலாற்றின் கதாநாயகர்களாக செயல்படவேண்டும் – திருத்தந்தை

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் நீதி மற்றும் அமைதிச் செயலகத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள கத்தோலிக்க சமூகப்பணி கூட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், ஒப்புரவு, ஒன்றிணைத்தல் மற்றும் சகோதரத்துவம் என்பவைகளின் பாலத்தைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார். வரலாற்றின் கதாநாயகர்களாக, முன்னோடிகளாக…

இறைவார்த்தை என்பது தற்காலிகமாக தோன்றி மறையும் உணர்வல்ல – திருத்தந்தை

இறைவார்த்தை என்பது ஒரு புலனாகாத கருத்தாகவோ தற்காலிகமாக தோன்றி மறையும் உணர்வாகவோ ஒரு நாளும் இருக்கமுடியாது என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். இறைவார்த்தையின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் குறித்து ஜனவரி 28, செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில்…

ஏழைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்திடுங்கள்!

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் பணிகளில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் திருஅவையின் இரக்கம்மிகு கதவுகளை அவர்களுக்கு அகலமாகத் திறக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்திய இலத்தீன் வழிபாட்டுக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (சிசிபிஐ)…

கிறிஸ்தவர்கள் இல்லாத ஈராக்கை நாம் எண்ணிப்பார்க்க முடியாது!

ஜெர்மன் பத்திரிகையாளரும் இறையியலாளருமான மத்தியாஸ் கோப் (ஆயவவாயைள முடியீயீ) அவர்கள் எழுதியுள்ள ’ஈராக்கில் கிறிஸ்தவப் பாரம்பரியம்’ (கூhந ஊhசளைவயைn ழநசவையபந in ஐசயளூ), என்ற நூலிற்கு வழங்கியுள்ள அணிந்துரை ஒன்றில், “கிறிஸ்தவர்கள் இல்லாத ஈராக்கை நாம் எண்ணிப்பார்க்க பார்க்க முடியாது” என்று…

நமது எதிர்நோக்கு அன்பிலிருந்து பிறந்தது மற்றும் அன்பில் நிறுவப்பட்டது!

நமது எதிர்நோக்கு அன்பிலிருந்து பிறந்தது மற்றும் அன்பில் நிறுவப்பட்டது என்றும், மனித பாவத்தால் ஏற்படும் அழிவுகளுக்கு மத்தியிலும், அன்பின் புதிய நாகரிகத்தை உருவாக்க இந்த அன்பு நம்மை அழைக்கிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். ஜனவரி 29, புதன்கிழமையன்று, கியூபா நாட்டின்…

மக்களின் துயரங்களில் அருள்பணியாளர்கள் வடிவமைக்கப்பட வேண்டும்!

ஓர் அருள்பணியாளராக வாழ்வதென்பது. மற்றொரு கிறிஸ்துவாக வாழ்வது என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும், மக்களின் துயரங்களில் அருள்பணியாளர்கள் வடிவமைக்கப்பட வேண்டும்! என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். ஜனவரி 30, வியாழக்கிழமை வலென்சியாவின் ஆயர்கள், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் மற்றும் உருவாக்கப் பயிற்சியாளர்களைத் திருப்பீடத்தில்…

அல்பேனிய பேராயர் அனஸ்தாஸ் மறைவிற்குத் திருத்தந்தை இரங்கல்!

ஜனவரி 25, சனிக்கிழமையன்று, அல்பேனிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர் பேராயர் அனஸ்தாஸ் அவர்கள் இறைபதம் அடைந்ததையொட்டி, இரங்கல் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். பேராயர் அனஸ்தாஸ் உடனான தனது தனிப்பட்ட சந்திப்புகளை இந்தச் செய்தியில் நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்…

அமெரிக்க விமான விபத்து குறித்து திருத்தந்தையின் இரங்கல்

வாஷிங்டனின் ரொனால்டு ரீகன் தேசிய விமானதளத்தில் ஒரு விமானமும் ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு இரங்கல் தந்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அனுப்பியுள்ளார். அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமும் இராணுவ…

திருமண முறிவு குறித்த விண்ணப்பங்கள் விரைவாக ஆராயப்பட வேண்டும் – திருத்தந்தை

ரோமன் ரோட்டா எனப்படும், திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான, திருஅவையின் உச்ச நீதிமன்றம், நீதி ஆண்டைத் தொடங்குவதையொட்டி, அந்த நீதிமன்றத்தின் தலைவரான பேராயர் அலெக்சாந்திரோ அரேல்லானோ செடில்லானோ அவர்களையும், நீதிமன்றத்தின் 20 உயர்மட்ட அதிகாரிகளையும் ஜனவரி 31 வெள்ளிக்கிழமையன்று சந்தித்து 30…

நம் துன்பங்கள் அனைத்தையும் இறைவனிடம் பகிர முன்வருவோம் – திருத்தந்தை

இறைவனை நம் அருகில் கொண்டு நம் அனைத்து ஏமாற்றங்களையும் வெற்றிகண்டு, ஒவ்வொரு நொடியையும் நாம் மீண்டும் துவக்குவதற்கான வாய்ப்பாக நோக்கமுடியும் என சனவரி 31, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் தன் டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார். நம் அனைத்து ஏமாற்றங்களையும், மீண்டும் எழும்பிவருவதற்கான…