பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஷில்லாங் உயர் மறைமாவட்டத்திற்கு துணை ஆயராக அருட்பணியாளர் பெர்னார்டு லாலு (49) அவர்களை நியமித்துள்ளார். மேகாலயாவில் உள்ள லயிட்டிங்கோட் என்னுமிடத்தில் ஜூன் 16, 1976 அன்று பிறந்த இவர், ஏப்ரல் 30, 2006 அன்று ஷில்லாங் உயர்மறைமாவட்டத்திற்காக குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தற்போது இவ்வுயர் மறைமாவட்டத்தின் வேந்தராக பணியாற்றி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள மூன்று உயர் மறைமாவட்டங்களிலும் குறிப்பாக சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தில் நடைமுறையில் இருந்து துணை ஆயர் நியமனம், துணை ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களின் பதவி உயர்வுக்குப் பின்பு பல்வேறு காரணங்களுக்காக தவிர்க்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.