நுரையீரல் தொற்றுக் காரணமாக ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருத்தந்தை இரண்டாவது நாளான சனிக்கிழமை இரவை மிகவும் மன நிறைவுடன் கடந்து நன்றாக உள்ளார் என்றார் என்று வத்திக்கான் செய்தி தொடர்பாளர் மத்தேயோ புருணி தெரிவித்தார்.
88 வயதான திருத்தந்தை அவர் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு முடிந்தவுடன் பல்வேறு தினசரி நாளிதழ்களை வாசித்தார்; அவ்வேளைக்குரிய மருத்துவச் சிகிச்சையை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு நல்கினார்.
மருத்துவர்கள் உரிய நல் ஓய்வை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொண்டபோதும், திருத்தந்தை இன்றைய நாளுக்குரிய மூவேளை செப உரையை மானுடத்தை ஒருங்கிணைக்கும் கலையின் ஆற்றல் என்ற தலைப்பில் தயாரித்து வழங்கினார். கலைஞர்களுக்கான ஜூபிலிக் கொண்டாட்டம் வத்திக்கானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நான் உங்கள் மத்தியில் இருக்கவே விரும்புகிறேன் என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தி, தாம் தற்போது மருத்துவனையில் நுரையிரல் தொற்றுக்காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். மருத்துவனையில் தமக்கு உறுதுணையாக மருத்துவமனைப் பணியாளர்களுக்கு தம் நன்றியையும் வெளிப்படுத்தினார்.
பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பல்வேறு அலுவல்களை முடித்துவிட்டு, முற்பகல் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மருத்துவச் சிகிச்சைக் காரணமாக திருதந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புக்கொண்ட நிகழ்வுகளில் பங்கேற்க இயலவில்லை.
