ஓர் அருள்பணியாளராக வாழ்வதென்பது. மற்றொரு கிறிஸ்துவாக வாழ்வது என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும், மக்களின் துயரங்களில் அருள்பணியாளர்கள் வடிவமைக்கப்பட வேண்டும்! என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஜனவரி 30, வியாழக்கிழமை வலென்சியாவின் ஆயர்கள், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் மற்றும் உருவாக்கப் பயிற்சியாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, ‘கிறிஸ்துவே நமது எதிர்நோக்கு’ என்றும் எடுத்துக்காட்டினார்.
தனது உரையில் எதிர்நோக்கை ஆழப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகத் துன்பத்தை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மற்றவர்களின் தன்னலமற்ற ஆதரவின் வழியாக, கடவுளின் இளகிய மனம் வெளிப்படுகிறது என்று வலியுறுத்திக் கூறினார்.
மனித இழப்பு மற்றும் திசைமாற்றத்துக்கான உருவகமாக டானா என்ற வானிலை நிகழ்வைப் பயன்படுத்தி, குணப்படுத்துதல் மற்றும் எதிர்நோக்கை கொண்டு வருவதற்கான அருள்பணித்துவ வாழ்வின் இறையழைத்தல் குறித்தும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.
உண்மையான எதிர்நோக்கு என்பது, மனிதகுலத்தின் மீட்புக்காக எல்லாமுமாகத் தன்னை வடிவமைத்துக் கொண்ட இயேசுவில் காணப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, திருநற்கருணையில் அவர் செய்வதைப் போலவே, தன்னலமின்றி தங்களை அர்ப்பணிப்பதன் வழியாக கிறிஸ்துவை உருவகப்படுத்த அருள்பணியாளர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டுக் காட்டினார்.