தன்பாலினத்தவர்களை அருள்பணியாளர் பயிற்சியகங்களில் சேர்ப்பது தொடர்பான வார்த்தைப் பயன்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, இதுசம்மந்தமான புரிதல்களையும் திருத்தந்தையின் எண்ணவோட்டங்களையும் அவர்களிடம் விளக்கினார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருபோதும் தன்பாலின சொற்களின் அடிப்படையில் யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை என்றும், இதன் அடிப்படையில் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அவர்களிடம் அவர் மன்னிப்புக்கேட்க விரும்புகின்றார் என்றும் கூறினார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி.
மே 28, இச்செவ்வாயன்று, தன்பாலினத்தவர்களை அருள்பணியாளர் பயிற்சியகங்களில் சேர்ப்பது தொடர்பான திருத்தந்தையின் வார்த்தைப் பயன்பாடு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார் புரூனி.
நான்கு சுவர்களுக்குள் இடம்பெற்ற இத்தாலிய ஆயர் பேரவையின் அமர்வு தொடர்பான விதிமுறைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார் என்று குறிப்பிட்ட புரூனி அவர்கள், திருஅவையில் அனைவருக்கும் இடம் இருக்கிறது! எவரும் பயனற்றவரும் அல்ல, யாரும் யாருக்கும் மேலானவரும் அல்ல, நம்மைப்போலவே அனைவருக்கும் இடமுள்ளது என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தந்தை கூறியதையும் எடுத்துக்காட்டினர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருபோதும் தன்பாலின சொற்களின் அடிப்படையில் யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை என்றும், இதன் அடிப்படையில் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அவர்களிடம் அவர் மன்னிப்புக்கேட்க விரும்புகின்றார் என்றும் கூறினார் புரூனி.
தன்பாலின கவர்ச்சியுடையவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது குறித்த திருத்தந்தையின் கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்கு விளக்கமளித்த வேளை, செய்தியாளர்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்தினார் புரூனி.