பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை 29 ஆவது ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாளை முன்னிட்டு பிப்ரவரி 1 மாலை 5 மணிக்கு நடைபெற்ற மாலைப்புகழ் வழிபாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் தலைமை தாங்கினார்.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால், 1997ஆம் ஆண்டில், அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான உலக நாளானது உருவாக்கப்பட்டது. இயேசு பிறந்த நாற்பதாம் நாளான, பிப்ரவரி 2ம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும், இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவாக திருஅவை சிறப்பிக்கும் அதே நாளில் அர்ப்பணிக்கப்பட்ட துறவியர்நாளாகவும் சிறப்பிக்கப்படுகின்றது.
தாங்கள் பெற்றுள்ள அழைத்தல் எனும் கொடைக்காக இந்நாளில் நன்றி செலுத்துகின்ற இருபால் துறவியர் வாழ்வானது இவ்வுலகின் கடினமான சூழல்கள் மத்தியில் சான்று பகரக்கூடியதாய் அமைய செபிக்க இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாலைப்புகழின்போது துறவியருக்கான உரை ஒன்றினையும் வழங்கினார்.
உரோ மறைமாவட்ட அருள்பணியாளர்கள் சந்திப்பு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகின்ற மார்ச் 6, வியாழனன்று உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களைச் சந்தித்தார். 2025ஆம் ஆண்டு தவக்காலத்தின் முதல் வியாழக்கிழமையன்று அருள்பணியாளர்களை சந்திக்க இருக்கும் திருத்தந்தை அவர்கள் கடந்த ஆண்டு 2024 உரோம் மறைமாவட்டத்தில் ஆயர் பேரவையின் கீழ் உள்ள மறைமாவட்ட அருள்பணியாளர்கள் மற்றும் நிரந்தர திருத்தொண்டர்களை 2024ஆம் ஆண்டு சனவரி 13 அன்று சந்தித்து உரையாற்றியுள்ளார்.