பிப்ரவரி 14 ஆம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை உடல் நலக் குறைவின் காரணமாக ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருத்தந்தையின் இரண்டு நுரையீரல்களும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் திருத்தந்தையின் உடல்நிலை சிக்கல் நிறைந்ததாக (complex) உள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் வெளிவந்த மருத்துவக்குறிப்பில் அவரது உடல் நிலை நாளுக்குநாள் பலவீனமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது.(his condition has deteriorated)
வத்திக்கான் செய்திக்குறிப்பின்படி திருத்தந்தையின் மருத்துவர்கள் திருத்தந்தையின் நெஞ்சகப்பகுதியை எக்ஸ்ரே ஒளிப்படம் எடுத்ததாகவும் பல்வேறு ஆய்வுக்கூட மருத்துவச்சோதனைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தது. அவரது உடல் நிலை தொடர்ந்து சிக்கலான நிலையில் நீடிப்பதாகவும் குறிப்புரைக்கிறது.
வத்திக்கான் குறிப்புப்படி எண்ணிறந்த நுண்ணுயிர் தொற்றான மூச்சு அழற்சி நோய்க்கு வித்திட்டு, சுவாசப் பிரச்சனைக்கு வழிவகுத்ததாகவும், அதற்கு கோhர்டிக்கோஸ்ட்டராய் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தும் தேவை எழுந்ததாகவும் இது மருத்துவ சிகிச்சை முறையை சிக்கலாக்கியதாகவும் தெரிவிக்கிறது.

18 ஆம் தேதி மதியம் திருத்தந்தைக்கு எடுக்கப்பட்ட சிடீ ஸ்கேனில் நுரையீரலின் இரண்டு பகுதிகளுமே நிமோனியா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய மருந்து சிகிச்சை முறை தேவைப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
மூச்சு அழற்சி நோய், நிமோனியாவுக்கு இட்டுச் செல்லும். இது நுரையீரல்களில் காற்றுப்பைகளில் மிகப்பெரிய நோய்தொற்றைப் பரவலாகவும் ஆழமாகவும் ஏற்படுத்தும். இதற்குரிய சிகிச்சை முறையில், நோயின் தீவிரத்தைப் பொறுத்து, போதுமான ஆக்சிஜன் மூக்குக் குழல் வழியாகவும் அல்லது வாய்வழியாகவும் வழங்கப்படும். நோயின் தீவிரத்தைக் குறைக்க பல்வேறு நீர்ம மருந்துகள் செலுத்தப்படும்.
இருந்தபோதிலும் திருத்தந்தை மிகவும் மனவுறுதியோடு தொடர்ந்து இருப்பதாக பத்திரிகைக் குறிப்பு தெரிவிக்கிறது. இன்று அவர் நற்கருணைப் பெற்றுக்கொண்டதாகவும் குறிப்புரைக்கிறது.
திருத்தந்தையோடு மிகவும் நெருக்கமாக தங்கள் தோழமையைக் காட்டும் இறைமக்களும் தம் நன்றியைத் தெரிவித்து, தொடர்ந்து செபிக்கும்படியும் வேண்டுகோள் விடுக்கிறது.

ஜெமேல்லி மருத்துவமனையில் பிப்ரவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட திருத்தந்தை தற்போது 10வது மாடியில் சிகிச்சையில் இருக்கிறார். தொடர் மருத்துவச் சிகிச்சையின் காரணமாக, திருத்தந்தை தினந்தோறும் தொலைபேசி வழியாக அழைத்துப் பேசும் காஸா பகுதியில் உள்ள திருக்குடும்ப ஆலயப் பங்குத்தந்தை அருட்பணியாளர் கபிரியேல் ரொமனெல்லி அவர்களிடம் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் பேசவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அமெரிக்கா இதழிடம் பெயர்சொல்ல விரும்பாத வத்திக்கான் செய்தியாளர் ஒருவர் பிப்ரவரி 17 ஆம் தேதி திருத்தந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
திருத்தந்தைக்கு அவர்தம் 17 ஆம் வயதில் கடுமையான நிமோனியா காய்ச்சலின் காரணமாக நுரையீரலில் வலப்பகுதியில் ஒரு சிறு மேற்பகுதி நீக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருந்தந்தை அவர்கள் இதே மாதிரியான நிமோனியா தொற்றுக் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு இதே மருத்துவனையிலிருந்து திரும்பினார். முழுமையான ஓய்வில் இருக்கும்படி திருத்தந்தையை மருத்துவர்கள் பணித்துள்ளனர். தற்போது திருத்தந்தையின் சிகிச்சை அறைக்குள் அவர்தம் செயலாளர்களான இரண்டே இரண்டு அருட்பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தந்தை பூரண சுகம் பெற்று மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்ப செபிப்போம்.
(நன்றி: அமெரிக்கமேகசின்) www.americanmagazine.org