வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த அருள்பணியாளர் பேட்டன், ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்திவைக்கப்பட்டிருக்கும் பிணையக் கைதிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயர்களை விளக்கினார்.
புனித பூமியில் ஒப்புரவுக்காக தங்களை அர்ப்பணிக்கும் தலைவர்கள் அதிகம் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள் என உரைத்தார் புனித பூமிக்கு திருஅவையில் பொறுப்பான அருள்பணி Francesco Patton.
காசா பகுதியில் இடம்பெற்றுவரும் போரால் ஏற்பட்டுள்ள காயங்கள், இரு நாடுகள் என்ற தீர்வு, கிறிஸ்தவர்களின் பங்களிப்பு, அமைதிக்கான பாதை என்பவை குறித்து வத்திக்கான் செய்திகளின் இயக்குனர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அருள்பணி பேட்டன் அவர்கள், இன்றைய யெருசலேமின் நிலைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
வத்திக்கான் செய்திகளின் இயக்குனர் தொர்னியெல்லியின் கேள்விகளுக்கு பதிலளித்த அருள்பணியாளர் பேட்டன், ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்திவைக்கப்பட்டிருக்கும் பிணையக் கைதிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயர்களை விளக்கினார்.
மேலும், காசாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் துயர்கள், வெஸ்ட் பேங்க் பகுதியில் எண்ணற்ற பாலஸ்தீனியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது, காசாவில் இடம்பெறும் படுகொலைகள், வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் நிலை, அண்மை அமைதி ஒப்பந்தங்கள் தரும் நம்பிக்கை, இரு நாடுகள் அருகருகே அமைதியுடன் வாழ விரும்பும் வத்திக்கானின் ஆவல், நீதியுடன்கூடிய அமைதியில் மக்களின் நம்பிக்கையிழப்பு, அமைதிப் பணியில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு போன்றவைகள் குறித்து வத்திக்கான் வானொலியில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அருள்பணி பேட்டன் அவர்கள், இத்தகைய இருண்ட சூழல்களிலும் நம்பிக்கையுடன் செயலாற்றி வருவதாக மேலும் தெரிவித்தார்.