மே 27, இத்திங்களன்று, அனுப்பப்பட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், லூசித்தானியா ஆயர் பேரவையின் தலைவரும், லீரியா மற்றும் பாத்திமா ஆயருமான ஜோசப் ஓர்னெலஸ் டி கார்வால்ஹோ அவர்களை, இம்மாட்டிற்குத் தன் பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
போர்த்துக்கல்லின் Braga’வில் மே 31 முதல் ஜூன் 2 வரை நடைபெறும் 5-வது தேசிய நற்கருணை மாநாட்டிற்கு வாழ்த்து செய்தியொன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாநாடு குறித்து தான் பெரிதும் மகிழ்வதாகவும் தெரித்துள்ளார்.
மே 27, இத்திங்களன்று, அனுப்பப்பட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், லூசித்தானியா ஆயர் பேரவையின் தலைவரும், லீரியா மற்றும் பாத்திமா ஆயருமான ஜோசப் ஓர்னெலஸ் டி கார்வால்ஹோ அவர்களை, இம்மாட்டிற்குத் தன் பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
போர்த்துக்கல் நாட்டின் கலாச்சார, சமூக மற்றும் மத நிலைமைகளை நன்கு அறிந்த நீங்கள் எனது எண்ணங்களையும் விருப்பங்களையும் உடனிருப்பையும் இம்மாநாட்டில் பங்குபெறும் விசுவாசிகள் அனைவருக்கும் வெளிப்படுத்துங்கள் என்றும் அக்கடிதத்தில் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
நீங்கள் ஊக்குவிக்கும் இந்த நற்கருணை மாநாட்டையும், பொது அதிகாரிகளையும் மற்றும் விசுவாசிகள் அனைவரையும் எனது பெயரில் வாழ்த்தி ஆசீர்வதிப்பதற்கான அங்கீகாரத்தையும் உங்களுக்கு வழங்குகிறேன் என்றும் அக்கடிதத்தில் உரைத்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்