காசாவில் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றைத் தடுப்பதற்கான செயல்களைச் செயல்படுத்துவதை உறுதிசெய்யவும், இராஃபாவில் நடைபெறும் கொடிய குற்றங்களைத் தடுக்கவும் மாநிலங்கள் இன்னும் அவசரமாகச் செயல்பட வேண்டும். மனித உரிமை அமைப்புக்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

காசாவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் தீர்மானம் புறக்கணிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, பொதுமக்களைப் பாதுகாக்கவும், இராஃபாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடூரமான குற்றங்களைத் தடுக்கவும் அவசர சர்வதேச நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளன 13 மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புகள்.

ஏப்ரல் 4 வியாழன்று SAVE THE CHILDREN எனப்படும் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்ட தகவல்களில், காசாவில் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைச் செயல்களை உறுதிசெய்யவும், இராஃபாவில் நடைபெறும் கொடிய குற்றங்களைத் தடுக்கவும் மாநிலங்கள் இன்னும் அவசரமாகச் செயல்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்த மார்ச் மாதம் 26 மற்றும் 27 மார்ச் இடையே இஸ்ரயேலில் நடந்த குண்டுவெடிப்புக்களினால் 14 குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 31 பேர் கொல்லப்பட்டனர் என்று எடுத்துரைத்துள்ள மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் இராஃபாவில், இஸ்ரேலிய ஊடுருவல் பற்றிய எச்சரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளன.

உறுதியான பாதுகாப்பு, தங்குமிடம், தண்ணீர், நலவாழ்வு, ஊட்டச்சத்து ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கப்பட வேண்டும் என்றும், காசா பகுதியில் இஸ்ரயேல் ஏற்படுத்திய தாக்குதலினால் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது அவ்வறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்